Posts

Showing posts from March, 2011

Islamic Jokes

Holy Prophet Muhammed (saw) smiled often and would make jokes with members of his community. For example, An old woman came to our Holy Prophet Muhammed (saw) and said: "O Messenger of Allah, pray to Allah (Subhanahu Wa Ta'ala) that I will enter Paradise." Holy Prophet Muhammed (saw) said jokingly, "O Mother of so-and-so, no old women will enter Paradise." The old woman went away crying, after hearing from Holy Prophet Muhammed (saw). Then Holy Prophet Muhammed (saw) sent one of his companions to tell her that, she will enter Paradise by becoming a young lady, because the Paradise is for only young people. Holy Prophet Muhammed (saw) said: "Do not laugh too much, for laughing too much deadens the heart." At another place, Holy Prophet Muhammed (saw) said: "If you knew what I know, you would laugh little and weep much." Imam Jafar as Sadiq (AS) said: Avoid incorrect jokes and humors, as it is the cause of enmity and grudge. Also Imam Jafa

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

இல்லற வாழ்வில் இணையும் முன்னர் எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி - எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம். 1. கற்பனையை விட்டு விட்டுக் கையேந்துங்கள்! திருமண வயதை எட்டிய எல்லாப் பெண்களுக்கும் தனது எதிர்காலக் கணவன் பற்றிய ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் இருப்பது இயல்புதான். வீட்டில கல்யாணப் பேச்சு அடிபடும் போதே அவள் கனவுகளில் மிதக்க ஆரம்பிக்கின்றாள். கணவனது உடல் அமைப்பு, உருவ அமைப்பு, உடை-நடை-பாவனை, பேச்சு என அனைத்தையும் பற்றிக் கற்பனை பண்ணி, தானே தனக்கென ஒரு கற்பனைக் கணவனைப் படைத்து வைத்துக்கொள்கிறாள். திருமணத்தின் பின்னர் தனது கணவன் தனது எதிர்பார்ப்புகளுக்கும், எண்ணங்களுக

துன்பக்கடலில் ஜப்பான்

இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு இணையானது இப்போது நிலநடுக்கத்தாலும் ஆழிப்பேரலையாலும், அணுஉலை வெடிப்புகளாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள். இதை ஜப்பான் பிரதமரே வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய துன்பக்கடலில் மிதக்கிறது ஜப்பான்.ஜப்பானில் நிலநடுக்கம் என்பது புதிதல்ல. அவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்னை. இதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு ஜப்பானியரும் பள்ளிக்கூடத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறார். எப்படி உணர்ந்துகொண்டு, எப்படிப் பாதுகாப்பாகப் பதுங்குவது என்பதெல்லாம் அந்த நாட்டில் குழந்தைகளும் அறிந்த விஷயம். நிலநடுக்கத்தால் வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து சரிந்ததாகச் செய்திகள் இல்லை. ஒவ்வொரு கட்டடமும் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை. ஆகையால்தான், ஆழிப்பேரலையில் பாதுகாப்புக்காக பலமாடிக் கட்டடத்தின் உச்சியில் நிற்பவர்கள், தங்கள் கட்டடம் கீழே முழுமையாக ஆழிப்பேரலையால் சேதமடைய, அவர்கள் மேலே அப்படியே பாதுகாப்பாக நிற்பதைப் பல தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. ஆழிப்பேரலையும் அவர்களுக்குப் புதிதல்ல. சுனாமி என்ற சொல்லே ஜப்பானியச் சொ

காய்கள் – அவரைக்காய்

இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். அதன்படி வீட்டைச் சுற்றி மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தரும் கீரைகள், மரங்களை நட்டு வளர்த்தனர். ஆனால் இன்று வீடுகளைச் சுற்றி காங்கிரீட் தளங்கள், குரோட்டன்ஸ் என்று சொல்லப்படும் எதற்கும் உதவாத நச்சுச் செடிகள், அல்லது பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள்தான் உள்ளன. இதனால் வீட்டுத் தோட்டக் காய்கள் எதுவென்று நம் எதிர்கால சந்ததியினர்களுக்குத் தெரியாமல் போகும் நிலை உள்ளது. இன்று காய்கறிகள், கனிகள் கீரைகள் எல்லாம் இரசாயன உரமிட்டு வளர்க்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. அவை சில நேரங்களில் உடலில் நச்சுத்த

வெந்தயத்தின் மகிமை

வெந்தயத்தின் மகிமை உணவாகவும், மருந்தாகவும் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்துக்கு வெந்தயம் பயன்படுது. இதன் கீரை, விதை இரண்டுமே மருத் துவக்குணம் கொண்டவை. ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை பார்க்குறவங்க, வெந்தயக்கீரையை தேங்காய்த் துருவலோட நெய்யில வதக்கிச் சாப்பிட்டா இடுப்பு வலி குறையும். ரத்தத்துல குளுக்கோசோட அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுது. குடல் புண்களை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு இருக்கு. `டையோஸ்ஜெனின்' என்கிற பைடோ- ஈஸ்ட்ரோஜன் கூட்டுப்பொருள் வெந்தயத்துல இருக்கு. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போலவே இது செயல்படுறதால, பெண்கள் சாப்பிட உகந்தது. ரத்தம் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியைப் பெருக்கும் ஆற்றல் இருக்குறதால, பிரசவித்த தாய்மார்களுக்கு வெந்தய உணவுகளைக் கொடுப்பாங்க. ஒரு பங்கு வெந்தயம், எட்டு பங்கு கோதுமை இரண்டையும் காயவைத்து, வறுத்து அரைத்து, அதோட போதுமான சர்க்கரை சேர்த்து லட்டு மாதிரி உருட்டி தினமும் சாப்பிட்டு வந்தா, நல்லா பசியெடுக்கும். தலையில பொடுகுத்தொல்லை இருக்குறவங்க, வெந்தயத்தை அரைச்சு, தலையில தேய்த்து ஊறவைத்து குளித்தால் பொடுகுத்தொல்லை நீங்கும். இப்படிப் பல

தாவூத் நபி வரலாறு

தாவூத் நபிக்கு ஜபூர் வேதம் வழங்கப்பட்டது (இசை) (கிருத்தவர்கள் பழைய ஏற்பாட்டின் இதற்கு சங்கீதம் என்பார்கள் ) 4:163 (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்ததுபோலவே, உமக்கும் நிச்சயமாக வஹீஅறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும்,இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும்,யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம். இன்னும் தாவூதுக்குஜபூர்என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். 17:55 உம்முடைய இறைவன் வானங்களிலிம் பூமியிலும் உள்ளவாகளைப் பற்றி நன்கு அறிவான்நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத்திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம் இன்னும்தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம். தாவூத் நபிக்கு இனிமையான குரல் .. புஹாரி எண் 5048 அபூ மூஸா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) 'அபூ மூஸா! (இறைத்தூதர்)தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது' என என்னிடம் கூறினார்கள். த

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்ட

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-5) எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி - எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) திட்டுவதையும், குறை கூறுவதையும் தவிர்த்தல்: சில பெற்றோர் எப்போதும் தமது குழந்தைகளைக் குறை கூறிக்கொண்டும், குத்திப் பேசிக்கொண்டும் இருப்பர். அவர்களின் பணிகளில் குறை காண்பதில் இவர்களுக்கு அளாதிப் பிரியம் இருக்கும். இருப்பினும் குழந்தைகளின் நன்மைகளையோ, திறமைகளையோ மறந்தும் கூட இவர்கள் போற்றுவதும் இல்லை; புகழ்வதுமில்லை. பிள்ளைகள் பெற்றோரின் புகழுரைகளை விரும்புகின்றனர். இது அவர்களை ஊக்கப்படுத்தும்; உற்சாகப்படுத்தும். அவர்களின் ஆற்றல்களை அதிகரிக்கும். சில பெற்றோர் குழந்தைகளின் திறமைகளைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்துகொள்வர். ஆனால் பிள்ளைகளைப் போற்ற மாட்டார்கள். வகுப்பில் மகன் இரண்டாவது வந்துள்ளான் என்றால் முதலில் இரண்டாவது வந்ததைப் போற்றாமல் ‘ஏன் முதலாவது வரவில்லை எனக் கண்டிப்பர். சில பெற்றோர் பெண் பிள்ளைகளின் வேலைகளைப் பார்த்துக் குறை கூறுவர். யாருடைய நினைப்பில் வீட்டைக் கூட்டினாய்? என்ற தொணியில் பேசுவர். பிள்ளைகளுடன் இப்படி நடந்

நபிகள் நாயகத்தின் ‘அரஃபா’ பேருரையும் உரிமைகள் பிரகடனமும்

நபிகள் நாயகத்தின் ‘அரஃபா’ பேருரையும் உரிமைகள் பிரகடனமும் எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி - எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி (இலங்கை) முஹம்மத் நபி அவர்கள் உயர்குலமான குரைஷிப்பரம்ரையில் ஆமினா என்ற பெண்ணுக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தை அப்துல்லாஹ்வையும், பிறந்து சில மாதங்களில் தனது தாய் ஆமினாவையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். பொதுவாக அநாதையாக வாழும் குழந்தைகளுக்கு சிறுவர் துஷ்பிரயோகங்கள், மற்றும் சீரில்லாத நடத்தைகளுக்கு ஆட்படுவதுண்டு. ஆனால் முஹம்மத் நபி அவர்கள் அவ்வாறான எவ்வித தீய நடத்தைகளையும் சந்திக்கவுமில்லை. அரங்கேற்றவுமில்லை. மக்காவில் வாழ்ந்த மக்கள் அவர்களை நற்பண்புள்ளவர், நம்பிக்கையாளர், உண்மையாளர் என அழைத்ததன் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம். இவர்கள் பிறந்த காலத்தில் மக்கள் கடவுளின் நேரடியான வழிகாட்டல்களை விட்டும் திசைதிரும்பிய மிருகங்களாக வாழ்ந்து வந்தனர், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச

தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம்

தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ தொழுகைக்கு என்ன முக்கியத்துவம் கூறப்பட்டிருக்கின்றதோ அதே முக்கியம் நேரத்திற்கும் கூறப்பட்டிருக்கின்றது. சென்ற இதழில் தொழுகையின் வரிசையில் நிற்கும் ஒழுங்குகள் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த இதழில் தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். ‘நிச்சயமாக தொழுகை முஃமீன்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது’ 4.103 மேல் கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ்வே தொழுகைக்கு நேரத்தை குறிப்பிட்டதாகக் கூறுகின்றான். ஒரு வேலைக்கு நேரம் குறிப்பிடப்படுவதென்பது அதனுடைய ஆரம்பத்தையும் முடிவையும் காட்டுவதாகும். இவ்வாறே ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்பமும் முடிவும் இருக்கின்றது. ஒவ்வொரு தொழுகையையும் அதன் நேரத்தில் தொழுதுவிட வேண்டும். இஸ்லாம் அனுமதித்த காரணமின்றி ஒரு தொழுகையை அதன் நேரம் தவறி தொழுவது பெரும் குற்றமாகும். அப்படித் தொழுவதை தொழுகையாக கணக்கிடப்படமாட்டாது. ஓவ்வொரு வணக்கத்திலும் சில தியாகங்களை அல்லாஹ் கடமையாக்கியிருக்கின்றான். தொழுகையிலுள்ள முக்கிய தியாகமே உரிய ந

கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை

கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை) சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய உலகளாவிய கட்டுரைப் போட்டியில் (ஹிஜ்ரி 1430) மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை புகழனைத்தும் விண்ணையும் மண்ணையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! எங்கே அமைதி? அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கும் எண்ணற்ற அருட்கொடைகளில் மிகவும் சிறந்ததும், அனைவரும் விரும்புவதும் ‘அமைதி’ என்று சொன்னால் அது மிகையாகாது. காசு கொடுத்து வாங்க முடியாத பொருள் அது. மற்றவர்களை விடுங்கள், அமைதி மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய நம் சமுதாயத்தில் அமைதி இருக்கிறதா? இலட்சங்கள் அலட்சியமாகப் பறக்கும் ஆடம்பரத் திருமணங்கள் மணல் வீடாகக் கலைந்து போகும் அவலம் தினந்தோறும் நடக்கின்றன. இது ஒரு சமுதாயத்தின் அமைதியைக் குறிக்கிறதா? இல்லை! அலங்கோலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குடும்ப அமைப்பு சீர்குலைந்தால் மொத்த சமுதாயமுமே சீர் குலைந்து போகும். பின் எங்கே நிம்மதி? இந்நிலைக்குப் புற அம்சங்களைக் காரணம் காட்டாமல் நம் தாழ்வுக்கு நாமே காரணம் என்ற பொறுப்புணர்வுடன் எங்கே தவறினோம் நாம்? என்ற சுய அலசலிலும

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்

குர்ஆனிலிருந்து.. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201 رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ 2. எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்