Posts

Showing posts from July, 2011

''பெற்றோரின் மகிமை''

''பெற்றோரின் மகிமை'' பெற்றோர்களின் பராமரிப்பு ஒருவர் திருமனத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியத்தைப் பெறவில்லை என்றால் அவர்படும் வேதனையை வரையருக்க முடியாது. குழந்தையைப் பெறுவதற்காக அவர் எவ்வளவு காசு வேண்டுமானாலும் செலவு செய்வார். காரணம் குழந்தை இருந்தால் பாச மழையைப் பொழிய முடியும் என்பது தான். தனக்கு குழந்தை உருவாகிறது என்ற செய்தி தெரிய வந்தால் அன்றிலிருந்து அந்தக் குழந்தையை சுமக்கும் தாயுடைய தியாகம் ஆரம்பமாகிறது.தன் குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பதற்காக எத்தனையோ உணவு வகைகளைத் தியாகம் செய்கிறாள்.தான் விரும்பிய உணவை சாப்பிட முடியாத நிலை அவளுக்கு ஏற்படுகிறது. குடும்பத்தில் அனைவரும் மகிழ்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சுற்றுலா சென்றாலும் அந்த பயணத்தில் அவள் இடம் பெற மாட்டாள் இடம் பெறவும் முடியாது. வயிற்றில் இருக்கும் தன் குழந்தைக்கு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தால் அந்தக் குழந்தை மீது அவர்கள் காட்டும் பாசத்தின் அளவைத்தான் நாம் வர்ணிக்க முடியுமா? தாய் தன் குழந்தைக்காக இரவு முழு

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்!

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! இந்த உலகில் தோன்றிய, தோன்றவிருக்கிற மனிதர்கள் அனைவரும் மரணத்தை சுவைப்பவர்களே! அந்த மரணத்திற்கு பின் இறைவனின் நீதி விசாரணைக்கு பின் சுவனம் எனும் சுக வாழ்க்கையை அடையவேண்டுமெனில், அதற்கான சேமிப்பு நன்மை மட்டுமே! ஒரு விவசாயி பருவகாலங்களில் தனது நிலத்தில் பயிரிட்டு அதன் மூலம் தானியங்களை சேகரித்து வைத்தால்தான் கோடை காலங்களில் கவலையற்று உண்டு வாழமுடியும். அதுபோல் இறைவன் வழங்கிய ஆயுளைக்கொண்டு இருக்கும் காலத்தில் நன்மைகளை சேகரித்து வைத்தால்தான் மறுமையில் சுவனத்தின் திறவுகோலாக அது அமையும். அதைவிடுத்து மனம் போன போக்கில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் மறுமையில் கைசேதப்படும் நிலைவரும். எனவேதான் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்; وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُواْ الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُواْ يَأْتِ بِكُمُ اللّهُ جَمِيعًا إِنَّ اللّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அரபு மொழியும் இஸ்லாமியப் பண்பாடும்

அரபு மொழியும் இஸ்லாமியப் பண்பாடும் இஸ்லாமிய விசுவாசக் கோட்பாடேஇஸ்லாமியப் பண்பாட்டின் மூலாதார அடிப்படையாகக் காணப்படுகின்றது. இப்பண்பாட்டின் ஏனையஅம்சங்கள் அனைத்தும் இந்த விசுவாக் கோட்பாட்டோடு தொடர்புற்றே அமைந்துள்ளன. எனவே, இஸ்லாமியப் பண்பாட்டின்அடித்தளமான 'தௌஹீத்' என்னும் ஏகத்துவக்கோட்பாட்டினைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இஸ்லாமியப் பண்பாட்டினைப் பொதிந்துள்ள அனைத்துஅம்சங்களும் செயல்படுகின்றன. இந்த விசுவாசக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே, முஸ்லிம்கள் அரபுமொழியைஇப்பண்பாட்டின் ஒரு அம்சமாக இணைத்துக் கொண்டனர். அதுமட்டுமன்றி, இம்மொழி முஸ்லிம்சமூகத்தின் கலாசார ஒருமைப்பாட்டிற்கு துணைபுரியும் ஒரு காரணியாகவும், முஸ்லிமின் ஆளுமையின்தனித்துவத்தினைப் பிரதிபலிக்கும் சாதனமாகவும் விளங்குகின்றது. மனித சமூகத்திற்கு அல்லாஹ்வின்இறுதி வேதமாக அமைந்த அல்குர்ஆனின் மொழியாகவும், இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மொழியாகவும் அதுவிளங்குகின்றது. உண்மையில் இறைவனின் இறுதித் தூதின் வெளிப்பாட்டு மொழியாக அரபு அமைந்ததானதுசில வரலாற்று நிகழ்ச்சிகளின் தவிர்க்க முடியாத விளைவன்று என்பதே குர்ஆனுக்கும், அரபு மொ

இறைநேசர்கள் யார் என்பதை உலகத்தில் மனிதனால் தீர்மானிக்க முடியுமா

இறைநேசர்கள் யார் என்பதையோ அல்லது ஒருவரை நல்லவரென்றோ உலகத்தில் தீர்மானிக்க முடியுமா?.......திருமறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது. “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நேசர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். எதற்காகவும் கவலைப்படவும் மாட்டார்கள்.அவர்கள் விசுவாசம் கொண்டு, (இறைவனை) அஞ்சி நடப்பார்கள்.” (10:62-63) யாருடைய உள்ளத்தில் ஈமானும் இறைவனை அஞ்சி நடக்கும் தக்வாவும் உள்ளதோ அவர்கள் அனைவரும் இறைநேசர்கள் என்று இவ்வசனம் சொல்கிறது. இவ்விரண்டு பண்புகளையும் மனிதக்கண்களால் எடைபோட முடியாது. உலகில் எமது பார்வையில் மகானாகத் திகழ்ந்தவர் மறுமையில் மகாபாவியாக இருக்கலாம். உலகில் எமது கண்ணோட்டத்தில் பாவியாக இருப்பவன் மறுமையில் மிகச் சிறந்த பேறுபெற்றவனாகத் திகழலாம். எனவே, ஒருவரை நல்லவர் கெட்டவர் என்று தீர்மானிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரமாகும். நிச்சயமாக மனிதனால் தீர்மானிக்க முடியாது. யாரைப்பற்றி இறைவன் நபிகளாருக்கு இவர்நல்லவர் என்று அறிவித்துக் கொடுத்தானோ அவரைப்பற்றி மட்டும் அல்லாஹ்வின் தூதர்‘இவர் சுவர்க்க வாசி’ என்று கூறியுள்ளார்கள். சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட 1

நோயாளியின் தொழுகை

நோய் என்பது ஆரோக்கியத்தின் எதிர் மறையாகும். உடம்பிலும், மார்க்கத்திலும் ஆரோக்கியம் உள்ளது போல், இவ்விரண்டிலும் அதற்கு எதிரான நோயும் உண்டு. உள்ளதில் நோய் எனப்படுவது, ஒரு மனிதனின் மார்க்க விஷயங்களில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் குறிக்கும். எனவே! நோய் என்பது அடிப்படையில் குறைபாடாகும். நோயான உடம்பு என்றால் ஆரோக்கியமற்ற, வலிமை குறைந்த உடம்பு என்று பொருளாகும். மேலும் நோயான உள்ளம் என்பது மார்க்க விஷயங்களில் அவரிடம் உள்ள குறைகளையும் சத்தியத்தை விட்டும் தூரமானதையும் குறிக்கும். நோயான உடம்பு என்பது உடல் உருப்புக்களில் ஏற்படும் சோர்வைக் குறிக்கும். ஒரு நோயாளியிடம் இருக்க வேண்டிய பொறுமையும் அதற்கான கூலியும்: ஒரு நோயாளி தனக்கு ஏற்பட்டுள்ள நோயை பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பொறுமையாளிகளுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ள நன்மைகளை அல்லாஹ்விடம் எதிர்பார்க்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நீர் கூறும்; “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் – அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள

மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்

மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள் ‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18) இரண்டாம் சூர் ஊதப்பட்டவுடன் மனிதர்கள் எவ்வாறு உயிர்பிக்கப்படுவார்கள்? அதைத் தொடர்ந்து நடைபெறுவது என்னவென்பதை இனி காண்போம். பூமியைப் பிளந்து வெளியேறுவர் இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் எல்லா மனிதர்களும் பூமியைக் கிழித்துக் கொண்டு வெளிப்படுவார்கள். ‘பூமி பிளந்து அவர்கள் வேகமாக வரும் நாள் அது தான். யாவரையும் ஒன்று சேர்க்கும் நாள்! இது நமக்கு மிக எளிதானதேயாகும்’. (அல்குர்ஆன் 50:44) ‘இலக்குகளை நோக்கி செல்வது போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியேறுவார்கள்’. (அல்குர்ஆன் 70:43) அழிவு நாளின் போது அழிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து மனிதர்களும் பூமிக்குள்ளிருந்தே உயிருடன் வெளிப்படுவார்கள். ஏதோ ஒரு இலக்கை நோக்கிச் செல்வது போல் வேகமாக விரைவார்கள் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன. மண்ணறைகளில் தங்கிய காலத்தை உணரமாட்டார்கள் பல்லாயிரம் ஆண்டுகள் மண்ணறைகளில் புதைந்து

மனிதர்களோடு பேசும் மிருகம்

மனிதர்களோடு பேசும் மிருகம் ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5) யுக முடிவு நாள் மிகவும் அண்மித்து விடும் போது ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களில் ஒன்றான தஜ்ஜாலின் வருகை பற்றி ஓரளவு நாம் அறிந்து கொண்டோம். அவனது மரணம் ஈஸா (அலை) அவர்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதால் ஈஸா (அலை) அவர்களின் வருகையை விளக்கும் போது தஜ்ஜாலின் மரணம் பற்றி விரிவாக அறியலாம். இனி ஏனைய அடையாளங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம். அதிசயப் பிராணி யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அதிசயப் பிராணி ஒன்றை இறைவன் படைத்து மக்களிடையே அதை நடமாட விடுவான். அத்தகைய பிராணியின் வடிவம் பற்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் விபரம் காணப்படா விட்டாலும் அத்தகைய பிராணி ஒன்று யுக முடிவு நாளின் நெருக்கத்தில் தோன்றும் என்பதற்கு திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கெதிரான தீர்ப்பு உறுதியாகும் போது இப்பூமியிலிருந்து ஒரு பிராணியை நாம் அவர்களுக்காக வெளிப்படுத்துவோம். அப்பிராணி அவர்களுடன் பேசும். (இதற்குக் காரணம்) மக்கள் நமது வசனங்

தாடி வளர்த்தல்

தாடி வளர்த்தல் in இஸ்லாம் முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் தாடியை மிகவும் கேவலமான ஒன்றாக கருதிக் கொண்டு (பெண்களைப் போல்) முகத்தை வைத்து கொள்ள விரும்புகின்றனர். இஸ்லாமியர்கள் இந்த நடைமுறையை கைவிட்டு விட்டதால், நீதி மன்றங்களும் கூட தாடி வைக்கத் தடை விதிப்பதை நாம் காண்கிறோம். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள தாடியைச் சிரைத்து கொள்வது இன்று நாகரீகமாகக் கருதப்படுகின்றது. மாடர்ன் முஸ்லிம்கள்(?) சிலர் “தாடி என்பது அரபியர்களின் வழக்கம், அந்த அடிப்படையை ஒட்டியே நபியவர்கள் தாடி வைத்திருந்தனர்” அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறத் துவங்கியுள்ளனர். தாடி என்பது அரபியர்களின் வழக்கம் என்பதும் உண்மையே! அபூ ஜஹ்ல் உட்பட பல அரபியர்கள் தாடி வைத்திருந்தனர். “மக்கத்துக் காபிர்களின் தலைவன் அபூஜஹ்ல், பத்ரு போர்க் களத்தில் வெட்டப்பட்டுக் கிடக்கும் போது, இப்னு மஸ்ஊது(ரழி) அவர்கள், அபூஜஹ்லின் தாடியைப் பிடித்துக் கொண்டு “நீதான் அபூஜஹ்லா” என்று கேட்டனர். அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல் : முஸ்லிம் இதை சிலர் “தாடி அரபிகளின் வழக்கம்” என்று கூறி முழுக்கச் சிரைத்து விடுகின்றனர். “நாட்டு வழக்கம்” என்

இஸ்லாம்

உண்மை முஸ்லிம்களாவது எப்போது? இஸ்லாம் இறை மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றிருக்கும் (பரம்பரை) முஸ்லிம்களே! நீங்கள் என்றாவது உங்கள் வாழ்க்கை முறைகளை இஸ்லாத்தை ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா? உங்கள் வாழ்க்கைக்கும் இஸ்லாத்திற்கும் என்னத் தொடர்பு இருக்கிறது. உங்கள் வாழ்க்கைக்கும், இஸ்லாத்திற்கும் எட்டிப் பிடிக்க முடியாத இடைவெளி நீண்டுக் கொண்டே செல்கிறது. ஏன்? ஒரு முஸ்லிம் ஊரில்-ஒரு குடும்பத்தில் பிறந்து-வளர்ந்து-வாழ்ந்து வருவதால் மட்டுமே நீங்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் என்ற பெயரை மட்டும் உங்களோடு வலிந்து ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்களுக்கும் என்னத் தொடர்பு இருக்கிறது? ஒரு முஸ்லிம் ஊரில் அல்லது ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வருவதால் அங்கு கண்டும் கேட்டும் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பவைகள் அனைத்தும் இஸ்லாம் என்பதே உங்கள் கண் மூடித்தனமான நம்பிக்கை ஏனென்றால் நீங்கள் பரம்பரை முஸ்லிம்கள்! உங்கள் தாய் தந்தையர்கள் முஸ்லிம்கள்! உங்கள் பாட்டன் முப்பாட்டன் என்று அனைவரும் முஸ்லிம்கள்! அந்தத் தொடரில் நீங்களும் முஸ்லிம்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் மௌலவி அலி அக்பர் உமரி அக்ரபியா தஃவா நிலையம், சவூதி அரேபியா இன்றைய கால கட்டத்தில் பெண்கள், நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம். கணவனிடம் நடந்து கொள்ளும் முறை: 1.கணவனுக்கு கட்டுப்படுதல்: எந்தப் பெண் தன் கணவன் இல்லாத சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து, கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே ‘ஸாலிஹான பெண்’ என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:34) ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பெண் சிறந்த பெண்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவன் பார்க்கும் போது அவனை சந்தோஷப்படுத்துகிறாளோ அவளே சிறந்தவள் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ) 2.கஷ்டத்திலும் கணவனுக்கு உதவி செய்தல்: நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை 600 இறக்கைகளை கொண்டவர்களாக வானத்தையும் பூமியையும் நிரப்பியவர்களாக கண்ட பொழுது மிகவும் பயந்தவராய் தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் ஓடி வந்து ‘என்னை போர்த்

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மாமரம்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மாமரம்... .. மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களுக்கு பயன்படுகிறது. சில வகை உணவுகளைக் கொடுத்தும், சிலவகை மருந்தாகவும், சில வகை இருப்பிடங்களை உருவாக்கவும், என இவற்றின் பயன்பாடுகளை அளவிட முடியாது. மாமரத்தைப் பற்றியும், அதன் மருத்துவக் குணங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம். கனிகளில் ராஜ கனியாக மாங்கனியைக் குறிப்பிடுகின்றனர். அதுபோல் முக்கனியில் முதல் கனியும் மாங்கனிதான். மாமரத்தின் பூர்வீகம் இந்தியா தான். குறிப்பாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் அதிக மாமரம் உள்ள மாவட்டமாகும். மாமரத்தை, ஆமிரம், எகின், சிஞ்சம், சூதம், குதிரை, மாழை, மாந்தி என பல பெயர்களில் சித்தர்கள் அழைக்கின்றனர். மா, பெருமர வகையைச் சார்ந்தது. இதில் பல வகைகள் உள்ளன. மா இலை ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர். இதன் இலை, பூ, பிஞ்சு, காய்,

தந்தைகளே! கவனியுங்கள்

வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர். தந்தையின் நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத இளம் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது. இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான்