Posts

Showing posts from February, 2012

இதயத்தை காப்பாற்றும் வழி!

உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது. 1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்? மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம். 2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்? முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியும். 3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்? நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும். 4. நாடித்துடிப்பின் இயல்பான அளவு என்ன? ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை. உங்கள் மன அழுத்தம், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மருந்துகள் போன்ற வற்றால் உங்கள் நாடித்துடிப்பு குறையவோ, கூடவோ செய்யலாம். 5. எப்பொழுது நாடித்துடிப்பு சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்? நாம் ஒவ்வொருவரும் தனித்தனியான இயல்பு உள்ளவர்கள். ஆகவே பொது வான ஒரு வரையறையைச் சொல்வது கடினம். நா

நெகிழ வைக்கும் சில சம்பவங்கள்

யூதர்களையும் கிறித்தவர்களையும் இஸ்லாமிய ஆட்சி வந்ததற்கு பிறகு முஸ்லிம்களால் கொடுமைபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுகிறது. இதை நாம் கீழே வரும் நபிமொழியைக் கொண்டு சரி பார்ப்போம். (6819. :புகாரி) இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்து விட்டிருந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களுடைய வேதத்தில் (இவர்களுக்கு) என்ன (தண்டனை) காணப்படுகிறது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், 'எங்கள் (மத) அறிஞர்கள், (விபசாரம் புரிந்தவர்களை) முகத்தில் கரி பூசி, முழங் கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்யவேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்' என்றார்கள். (அப்போது அருகில் இருந்த முன்னாள் யூத அறிஞரான) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'தவ்ராத்தைக் கொண்டுவரும்படி அவர்களிடம் கூறுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். அவ்வாறே 'தவ்ராத்' கொண்டு வரப்பட்டபோது, யூதர்களில் ஒருவர் (அதில் பதிவாயி

இஸ்லாமும் இங்கிதமும்

மனிதனை மதிப்பதன் இன்னொரு பகுதிதான் அவர்களின் பெயர்களை நினைவில் வைப்பது. சிரமமான விஷயம் இது. ஆனால் அவசியமான விஷயம். குறிப்பாக இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கும், மக்கள் தொடர்பை விரும்புகின்றவர்களுக்கும் இருக்கவேண்டிய பண்பு. பேருந்துப் பயணத்திலோ வங்கியிலோ, கடை வீதியிலோ திருமண வீட்டிலோ எங்காவது ஒரு தடவை மட்டுமே நாம் சந்தித்த மனிதரை மீண்டும் சந்திக்கும்போது அவரின் பெயரை நினைவில் வைத்து, “வாருங்கள்..............” என்று பெயர் சொல்லி அழைத்துப் பாருங்கள், நிச்சயம் உங்கள் மீது ஒரு வித அன்பும், மரியாதையும் அவருக்கு ஏற்படும். பள்ளிக்கூடத்தில்கூட ஆசிரியர் மாணவர்களிடம் “அந்தக் கடைசியில் இருக்கிறியே நீ சொல்லுப்பா...!” என்றோ அல்லது வேறு எதையோ கூறும் ஆசிரியரைவிட “அப்துல்லாஹ், நீ சொல்லு...!” என்று பெயர் கூறி அழைக்கும் ஆசிரியரையே மாணவர்கள் மதிப்பார்கள். தொலைப்பேசி உரையாடலிலும் அவ்வாறே. வெறுமனே “ஹலோ...என்ன விஷயம் சொல்லுங்க” என்று பேசும் மனிதர்களை விட “சொல்லுங்க காலித்...என்ன விஷயம் காலித்...?” என்று பெயர் சொல்லிப் பேசுபவராக நீங்கள் இருந்தால் உண்மையில் உங்கள் அழைப்பு மணிஓசை தொலைப்பேசியி