Posts

Showing posts from September, 2011

தோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்

தோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன் சார்பியல் கொள்கையும் இஸ்லாத்தின் பார்வையும்: உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி உண்டாவதாக. நமது முந்தைய பதிவான “கடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும்” பதிவை காண இங்கு சொடுக்கவும். இறை மறையின் காலம் பற்றிய செய்திகளையும், தவறாக காண்பிக்கப்படும் நபியின் விண்வெளி பயணத்தை பற்றிய அறிய சில செய்திகளையும், சில விசயங்களை மறைத்து பொய் தகவல்களை இணைத்து வெளிப்படுத்திய நாத்திக, கம்முனிஷ பொய்களையும் உடைப்பதற்கே நம்முடைய இந்த பதிவுகள். இப்பிரபஞ்சத்தில் அனைத்தும் காரண காரியங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் விதி. இப்பிரபஞ்சம் நேர்த்தியாக வடிவமைக்கபட்டதுமில்லாமல் பொதுவான இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு அதன் பயணத்தை தொடர்கிறது. ஒரு சிறு பொருள் அசைந்தாலும் கூட ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கும், இயற்பியல் விதிகளின் படியே செயல்படும். மனிதன் தான் செயல்படுத்தும் செயல்களில் கூட ஒரு நேர்த்தியை எதிர்பார்க்கிறான், அப்படியிருக்க இறைவனின் அரசாட்சி இப்பிரபஞ்சம் நேர்த்தியாக உள்ளதும், அடிப்படை இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் இறைவனின் நேர்த்தியை

மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்!

மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்! அல்லாஹ் கூறுகிறான்: - ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35) மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் மரணவேளை என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த உலகவாழ்வின் இறுதிக் கட்டமான அந்த மரணத்தின் நேரம் மற்றும் மண்ணறைகளில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் அமல்கள் செய்வதற்குரிய கால, நேரங்கள் எல்லாம் நாம் உயிருடன் இருக்கும் போது தான். மரணம் நம்மை வந்தடைந்தவுடன் நம்முடைய நன்மை தீமை பதிவேடுகள் மூடப்படும். ஆகவே நல்ல அமல்கள் செய்வதற்கு இதுதான் நேரமாகும். அல்லாஹ் கூறுகிறான்: - “அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீ