Posts

Showing posts from June, 2012

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை

  அல்லாஹ்வின் மீது நம்பிக்கை ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அடிப்படை விளக்கம் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும் என்பதின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ் தன்னைக் குறித்து அல்குர்ஆனில் கூறியிருக்கும் தன்மைகள் (ஸிஃபத்துகள்) செயல்கள் அனைத்தும் உண்மையே என நம்புவதாகும். அந்தத் தன்மைகளையும் செயல்களையும் கொண்டுதான் அல்லஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும். அத்துடன் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி கூறியுள்ள தன்மைகளையும், செயல்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்குர்ஆனிலும் ஆதாரமிக்க நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளதில் நமது அறிவைக் கொண்டு கருத்து, பொருள் மாற்றத்தையோ செய்யக்கூடாது. அவனுடைய தன்மைகளுக்கும் செயல்களுக்கும் படைப்பினங்களின் தன்மைகளையும் செயல்களையும் உதாரணமாக உவமையாக கூறக்கூடாது. படைப்பினங்களின் தன்மைகளைக் கொண்டும் செயல்களைக் கொண்டும் அல்லாஹ்வின் தன்மைகளையும் செயல்களையும் விவரிக்கக் கூடாது. அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள் பற்றி கூறப்பட்டுள்ள குர்ஆனின் வசனங்களை பொருளற்றவை என்று கூறக்கூடாது. அல்லாஹ் தன்னைப்பற்றி அல்குர்ஆனில் கூறியிருக்கும் வசனத்திற்கேற்ப அல்லாஹ்வை நம்பிக்கை கொள்

இணைவைத்தல்

Image
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடி யோருக்கு மன்னிப்பான். (4:48,116) அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகனே! என்னிடம் ஆதரவு வைத்து என்னை நீ அழைத்தால் நீ செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகிறேன், நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன். ஆதமுடைய மகனே! நீ செய்த பாவங்கள் வானம் நிரம்ப இருந்தாலும் பிறகு என்னிடம் நீ மன்னிப்புக் கோரினால் நான் உன்னை மன்னித்து விடுகிறேன். நான் எதை யும் பொருட்படுத்த மாட்டேன். நீ இப்பூமி நிரம்ப பாவங்கள் செய்து எனக்கு எதையும் இணை வைக்காமல் என்னை சந்தித்தால் இப்பூமி நிறைய மன்னிப்பை உனக்கு வழங் குவேன். அறிவிப்பவர்:அனஸ்(ரழி) நூல்:திர்மிதி சிலர் அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடுகின்றனர். காரணம் அதிகம் பாவம் செய்ததனால் அல்லது ஒரு முறையோ பல முறையோ தவ்பா செய்து விட்ட பிறகு மீண்டும் பாவம் செய்து விடுவதனால் அல்லாஹ் நம்மை மன்னிக்க மாட்டான் என்று கருதிக் கொண்டு தொடர்ந்து பாவங