Posts

Showing posts from March, 2012

அர்ஷின் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்!

அர்ஷின் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்! “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (புகாரி, முஸ்லிம்) குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக. மஹ்ஷர் வெளியின் அகோரம்:- மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனி

அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்

அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்! அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும். இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ''என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,"" என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) (அல்குர்அன் 31:13) ஈமான் கொண்டபின் எதேனும் பெரும்பாவங்கள் நிகழ்ந்துவிட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ் நாடினால் 'தவ்பா' (பாவமீட்சி) இல்லாமலும் மன்னித்து விடலாம். ஆனால் "இணை வைத்தல்" என்ற பாவத்தை 'தவ்பா' இன்றி அல்லாஹ் மன்னிப்பதேயில்லை. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: إِ நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்...... (அல்குர்அன் 4:48) "ஷிர்க்'கில் ஈடுபடுபவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்தே வெளியேறியவராவார். அவர் பாவ மன்னிப்பு கோராமல் இறந்துவிட்டால் என்றென்றும்